கோர விபத்து! குழந்தை உட்பட 5 பேர் பலி..!! வடமாநிலங்களை பொருத்த வரையில் கடந்த சில நாட்களாகவே சாலை விபத்துக்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் உ.பி-யில் சாலை விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள ஹண்டியா காவல்நிலையம் அருகே வாகனம் ஒன்று தடுப்பின் கம்பத்தில் மோதியது. இதில் வானத்தில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதே போல் 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு உயிரிழந்தவர்களுக்கு யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவ மனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு உரிய கிசிச்சை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.