மாணவியருக்கு 1,000 ரூபாய் உதவிதொகை!


மாணவியருக்கு 1,000 ரூபாய் உதவிதொகை!


அ.தி.மு.க., -அசோக்குமார்: எம்.ஜி.ஆர்., கொண்டு வந்த சத்துணவு திட்டத்தால், உயர்ந்த நிலைக்கு பல லட்சம் பேர் வந்துள்ளனர். கிராமப் பகுதிகளில் ஆடு, மாடு மேய்த்தவர்கள் எல்லாம் ஐ.ஏ.எஸ்., - -ஐ.பி.எஸ்., ஆகியுள்ளனர்.

 

சபாநாயகர் அப்பாவு: அதற்கு முன் காமராஜர் காலத்தில் மதிய உணவு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

 

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்: அதற்கு முன் நீதிக்கட்சி காலத்தில், சென்னை மாநகராட்சியில் சத்துணவு வழங்கப்பட்டுள்ளது.

 

அசோக்குமார்: ஜெயலலிதா இலவச நோட்டு, புத்தகம், பேனா, லேப்டாப், சைக்கிள், காலணி போன்றவற்றை வழங்கினார். இதனால், தமிழகத்தில் உயர்கல்வி படிப்பவர்கள் 51.4 சதவீதமாக அதிகரித்துள்ளனர். இதில், பெண்கள் 51 சதவீதமும்; ஆண்கள் 51.8 சதவீதமும் உயர்கல்வி படிக்கின்றனர். இப்போது, மாணவியருக்கு 1,000 ரூபாய் தருவதாக அறிவித்து உள்ளீர்கள். இதுபோன்ற திட்டங்களுக்கு எல்லாம் முத்தாய்ப்பாக இருந்தது ஜெயலலிதா அரசு செயல்படுத்திய திட்டங்கள் தான்.

 

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி: நீங்கள் சொல்லும் கணக்கு 100 சதவீதத்தை தாண்டுகிறது. எனவே, கணக்கை சரியாக சொல்லுங்கள். இவ்வாறு விவாதம் நடந்தது.

Comments

Popular posts from this blog

Chorizo Meatballs

The Best Bacon Cheddar Cream Cheese Dip

‘பிரெஞ்சு ஓபன்’…ஜோகோவிச்சை வம்பிழுத்த நடால்: இறுதியில் நடாலே வெற்றி: சுவாரசிய போட்டி!