Baakiyalakshmi Serial: பாக்யாவுக்கு எழுந்த சந்தேகம்.. கோபி போட்ட பலே திட்டம்..!


Baakiyalakshmi Serial: பாக்யாவுக்கு எழுந்த சந்தேகம்.. கோபி போட்ட பலே திட்டம்..!


கோபிபற்றி செல்வி சொன்ன விஷயங்களை நினைத்து குழப்பத்தில் இருக்கிறாள்பாக்யா. அப்போது அவன் வீட்டுக்கு வர்ற, பாக்கியா என்னங்க என அழைக்கிறாள். அதற்கு அவன் நான் சாப்பிட்டுட்டேன் என போனை பார்த்து சிரித்துக் கொண்டே மேலே சென்று விடுகிறான் கோபி. அதன்பின்னர் மதியம் உங்களுக்கு போன் பண்ணேன் ஏன் எடுக்கல என கோபி கேட்க, ஆபீஸில் மீட்டிங்கில் இருந்தேன் என சொல்லி சமாளிக்கிறான் கோபி.

பிறகு பாக்கியா நான் உங்க காரை பார்த்தேன் அதுவும் இரண்டு தெரு தள்ளி தான் பார்த்தேன் என சொல்ல அப்படியா அதெல்லாம் இருக்காது என சொல்கிறான் கோபி. உடனே பாக்யா கார் நம்பரை கரெக்டா சொல்லி கேட்கிறாள். உடனே கோபி சிரித்து கொண்டே, ஒரு கிளைன்ட் மீட்டிங். அதை முடிச்சிட்டு நேரா ஆபிசுக்கு போய் அங்கேயும் ஒரு மீட்டிங். இன்னைக்கு எல்லாம் ஒரே டைட் முடியல என பொய் சொல்கிறான்.

அதன்பின்னர் பாக்யா, இவர் ஏன் நம்மகிட்ட பொய் சொல்றாரு என யோசிக்கிறாள். அதனை தொடர்ந்து செல்வி, இனிமே உன் புருஷனை பற்றி பேச மாட்டேன். அவரை மாதிரி இந்த உலகத்துல ஒரு உத்தமரே கிடையாது என கிண்டலடிக்கிறாள். அப்போது எழில் வர, உங்க அப்பா இப்பலாம் நம்மகிட்ட நிறைய பொய் சொல்றாரு என நடந்த விஷயத்தைச் சொல்கிறாள் பாக்யா. அந்த நேரத்தில இவ வந்து எதையாவது ஒன்னு சொல்லும்போது பயமா இருக்கு என கூறுகிறாள்.

Bharathi Kannamma: அப்பாவை பற்றி லட்சுமி சொன்ன வார்த்தைகள்... ஆடிப்போன கண்ணம்மா..!

அவளிடம் நீ பயப்படுற மாதிரி எதுவும் நடக்காது. அப்பா அந்தளவுக்கு வொர்த் இல்லை என சொல்கிறான். பாக்யாவும் சரியென சொல்கிறாள். அதன்பின்னர் ஜெனி, எழில் எல்லாரும் சேர்ந்து சத்தியமூர்த்திக்கு நடக்க பயிற்சி கொடுக்கின்றனர். இதனிடையில் பாக்யா கல்யாண ஆர்டர் சமைக்க அவசரமாக கிளம்ப, பாக்யாவுக்கு வந்த சந்தேகத்தை சமாளிச்சே ஆக வேண்டும் என யோசிக்கிறான்.

கோபி அவளிடம் ஒரே உடம்பு வலியா இருக்கு, நடக்கக் கூட முடியல நீ உடம்பு வலிக்கு மாத்திரை வெச்சு இருக்கியே அதை கொடு என கேட்கிறான். உடனே அவளும் பதறிப்போய் அவனுக்கு என்னாச்சு என கேட்டு, சுடுதண்ணீர் எல்லாம் வைத்து கொடுக்கிறாள். இதனால் கல்யாண ஆர்டர் சமைக்க செல்ல லேட் ஆகிறது. இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

Comments

Popular posts from this blog