தனுஷ்- பாலா இடையே இப்படி ஒரு ஒற்றுமையா ? எல்லாத்துக்கும் அதுதான் காரணம்..!
தனுஷ்- பாலா இடையே இப்படி ஒரு ஒற்றுமையா ? எல்லாத்துக்கும் அதுதான் காரணம்..!
இந்த விவாகரத்து செய்தி ரசிகர்களையும் சினிமா வட்டாரங்களையும் அதிர்ச்சியளிக்க விவாகரத்து பெற்றவர்களோ ஒன்றுமே நடக்காதது போன்று அவரவர் வேலைகளில் பிஸியாக இருந்து வருகின்றனர். என்னதான் வேலைகளில் கவனம் செலுத்தினாலும் மனதளவில் அந்த பாதிப்பு இருக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
சிம்புவை பார்த்து இனி அந்த கேள்வியை கேட்கமுடியாது..! ஏன் தெரியுமா ?
விவாகரத்திற்கு பிறகு ஐஸ்வர்யா தான் இயக்கும் ஆல்பம் பாடல்களில் பிஸியாக இருந்து வருகின்றார். சமந்தாவும் அதேபோன்று பல படங்களில் கலக்கி வருகின்றார். இந்நிலையில் தனுஷ் மற்றும் பாலா இருவரும் தங்கள் படங்களில் அதிகளவு கவனம் செலுத்தி வருகிறார்களாம்.
அதற்கு காரணம் அவர்கள் சொந்த வாழ்க்கையில் நடந்த சோகங்களை மறக்கவே அவர்கள் படங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக சொல்லப்படுகின்றது. தனுஷ் தற்போது வாத்தி, திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.
அதேபோல கட்டாய வெற்றியை எதிர்நோக்கியுள்ள பாலா நடிகர் சூர்யாவின் பட வேலைகளில் பிஸியாக இருக்கின்றார். இவர்கள் இருவரும் என்னதான் வேலைகளில் பிஸியாக இருந்துவந்தாலும் அவ்வப்போது தங்கள் சொந்த வாழ்க்கையை எண்ணி வருந்துகின்றார்களாம்.
குறிப்பாக தன் குழந்தைகளுடன் மிகவும் நெருக்கமான இவர்கள் அவர்களின் நலனை எண்ணி தான் வருத்தப்படுகின்றார்கள். விவாகரத்து பெற்றதினால் தன் பிள்ளைகளின் நலனுக்கு ஏதாவது பாதிப்பு வந்துவிடுமோ என எண்ணி இவர்கள் கவலைப்படுவதாக தெரிகின்றது. இந்த கவலையெல்லாம் இவர்கள் மறக்கவே தங்கள் பட வேலைகளில் அதிக கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் - ஐஸ்வர்யா விவகாரத்து? எஸ் ஏ சந்திரசேகர் அறிவுரை!
Comments
Post a Comment