‘எப்படி தோத்தது கொல்கத்தா?’…மூன்று முக்கிய காரணங்கள்: பட்லருக்கு இத பண்ணிருக்க கூடாது!
‘எப்படி தோத்தது கொல்கத்தா?’…மூன்று முக்கிய காரணங்கள்: பட்லருக்கு இத பண்ணிருக்க கூடாது!
ராஜஸ்தான் இன்னிங்ஸ்:
முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜாஸ் பட்லர் 103 (61) அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அடுத்து தேவ்தத் படிக்கல் 24 (18), சஞ்சு சாம்சன் 38 (19), ஹெட்மையர் 26 (13) ஆகியோர் தங்களது பங்கிற்கு ரன்களை சேர்த்ததால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 217/5 ரன்களை குவித்தது.
கொல்கத்தா இன்னிங்ஸ்:
இலக்கை துரத்திக் களமிறங்கிய கொல்கத்தா அணியில் ஆரோன் பிஞ்ச் 58 (28), ஷ்ரேயஸ் ஐயர் 85 (51), உமேஷ் யாதவ் 21 (9) ஆகியோர் காட்டடி அடித்தனர். இருப்பினும் மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களை மட்டும் சேர்த்ததால், கொல்கத்தா அணி 19.4 ஓவர்கள் முடிவில் 210/10 ரன்களை மட்டும் சேர்த்து 7 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.
இப்போட்டியில் கொல்கத்தா அணி தோல்வியடைந்ததற்கு மூன்று காரணங்கள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.
பட்லருக்கு எதிராக:
ஜாஸ் பட்லர் சிறந்த பார்மில் இருக்க கூடிய பேட்ஸ்மேன். அவருக்கு எதிராக தொடர்ந்து ஒரே மாதிரியான வேகத்தில் பந்துவீசினால், அது பலனற்றதுதான். கொல்கத்தா அணி பௌலர்கள் இதே தவறைத்தான் செய்தார்கள். ஒரு ஓவரில் ஒருமுறைகூட வேகம் குறைந்த பந்துகளை வீசவில்லை. அப்படி வீசியிருந்தால், பட்லருக்கு எதிராக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க முடியும்.
ரன் அவுட்:
மெகா இலக்கை துரத்திக் களமிறங்கும்போது ரன் அவுட் ஆவது என்பது, பின்னடைவான விஷயம்தான். அதுவும் அதிரடி பேட்ஸ்மேன் சுனில் நரைன், முதல் ஓவரில் ஒரு பந்தைகூட எதிர்கொள்ளாமல் ரன் அவுட் ஆகி ஆட்டமிழந்தது, கொல்கத்தா அணிக்கு பலத்த அடியாகத்தான் பார்க்கப்படுகிறது. அதேபோல் ஆண்ட்ரே ரஸலும் அஸ்வின் பந்தில் போல்ட் ஆகி கோல்டன் டக் ஆனதும், கொல்கத்தா அணியின் வெற்றியை பாதித்தது.
6 பந்தில் 4 விக்கெட்:
கொல்கத்தா அணி வெற்றிபெற 4 ஓவர்களில் 40 ரன்கள் தேவைப்பட்டபோது, 17ஆவது ஓவரை வீசிய சஹல் முதல் பந்தில் வெங்கடேஷ் ஐயரையும் 6 (7), அடுத்து 4,5,6 ஆகிய பந்துகளில் ஷ்ரேயஸ் ஐயர் 85 (51), ஷிவம் மாவி (0), கம்மின்ஸ் (0) ஆகியோரை வீழ்த்தி ஹாட்ரிக் எடுத்தார். இதுதான் கொல்கத்தா அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அடுத்து டெய்ல் என்டர்ஸ் மட்டுமே இருந்ததால், 12 பந்துகளில் 18 ரன்களைகூட அடிக்க முடியவில்லை.
Comments
Post a Comment