கப்பலில் வந்தடைந்த நிலக்கரி; தூத்துக்குடியில் மீண்டும் தொடங்கியது மின் உற்பத்தி…!!
கப்பலில் வந்தடைந்த நிலக்கரி; தூத்துக்குடியில் மீண்டும் தொடங்கியது மின் உற்பத்தி…!!
கடந்த வாரம் நம் தமிழகத்தில் இரவு நேரங்களில் மின்வெட்டு நிகழ்ந்தது. இந்த மின்வெட்டு ஆனது தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக தமிழகம் முழுவதும் நிகழ்ந்தது. அதோடு மட்டுமில்லாமல் சட்டப்பேரவையில் சில நாட்களுக்கு முன்பு தான் மின்சார துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது.
ஏனென்றால் நம் தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை அதிகமாக இருந்தது. எனவே முதலமைச்சர் ஸ்டாலின் கடிதத்தின் வாயிலாக பிரதமர் மோடிக்கு வலியுறுத்தி இருந்தார். அதோடு மட்டுமில்லாமல் தூத்துக்குடி அனல் மின் நிலையத்திலும் நிலக்கரியானது மூன்று நாள் வரைக்கும் தான் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் தூத்துக்குடியில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளதாக தெரிகிறது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள நான்கு யூனிட்டுகளில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
விசாகப்பட்டினத்தில் இருந்து கப்பல் மூலம் 30 ஆயிரம் டன் நிலக்கரி தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு வந்தடைந்ததை அடுத்து மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அனல் மின் நிலையத்தில் 4 யூனிட்டில் மின் உற்பத்தி துவங்கியதை அடுத்து ஐந்து யூனிட்களில் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
கடுமையான நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நேற்று நான்கு யூனிட்டில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Related Topics:power, tuticorin, மின் உற்பத்தி
Click to comment
Comments
Post a Comment