வட இந்திய மக்களே உஷார்!! எச்சரிக்கும் வானிலை மையம்….
வட இந்திய மக்களே உஷார்!! எச்சரிக்கும் வானிலை மையம்….
இந்தியாவில் அடுத்த 5 நாட்களுக்கு கடுமையான அனல் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கோடைக்காலத்தையொட்டி இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் அடுத்த 5 நாட்களுக்கு கடுமையான அனல் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதனால் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என கூறியுள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மாகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அடுத்த 4 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆரஞ்சு எச்சரிக்கை என்பது வெயிலில் தாக்கத்திற்கு தயாராக இருக்க வேண்டும் என்பதை குறிக்கிறது. மத்திய பிரதேசத்தில் 45.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
அதே போல் வடமேற்கு இந்தியாவில் பல இடங்களில் 47 டிகிரி செல்சியஸ் மேல் வெப்பம் பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Related Topics:Weather Center, வானிலை மையம்
Click to comment
Comments
Post a Comment