பெட்ரோல், டீசல் இன்றைய (மே 19-2022) விலை இதுதான்


பெட்ரோல், டீசல் இன்றைய (மே 19-2022) விலை இதுதான்


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.

டீசல் விலை வரலாறு காணாத உச்சமாக ரூ.100-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல பெட்ரோல் விலையும் 110 ரூபாயை கடந்து விற்பனையாகிறது. எரிபொருட்களின் விலை உயர்வால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றது.

கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி (புதன் கிழமை) பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து, சென்னையில் 110.85 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 43வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. நேற்று விற்பனை செய்யப்பட்ட அதே விலையில் இன்றும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்களும் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், அண்டைநாடான இலங்கையில், அந்நாட்டு கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பெட்ரோலை பெற, அந்நிய செலாவணி கையிருப்பில் இல்லை என எரிசக்தி துறை அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார். இதனால், பெட்ரோல் பங்கில் மக்கள் காத்துக்கிடக்க வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், தேவையான அளவிற்கு டீசல் இருப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கப்பல் நிறுவனத்திற்கு ஏற்கெனவே 400 கோடி ரூபாய் நிலுவைத் தொகை தர வேண்டும் என்றும் அந்த தொகை அளிக்கப்பட்ட பின்னரே, மேலும் பெட்ரோல் வாங்க முடியும் என்றும் விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Must Read : ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்ய ஆர்டிஓ அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது - உயர்நீதிமன்றம்

இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய, உலக வங்கி சுமார் 125 கோடி ரூபாய் இடைக்கால நிதியாக அளித்துள்ள நிலையில், இதனை பெட்ரோல் இறக்குமதிக்கு செலவிட இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

Chorizo Meatballs

The Best Bacon Cheddar Cream Cheese Dip

‘பிரெஞ்சு ஓபன்’…ஜோகோவிச்சை வம்பிழுத்த நடால்: இறுதியில் நடாலே வெற்றி: சுவாரசிய போட்டி!