சர்வதேச நீளம் தாண்டுதல்: ஸ்ரீசங்கருக்கு தங்கம்292156540


சர்வதேச நீளம் தாண்டுதல்: ஸ்ரீசங்கருக்கு தங்கம்


உலக தடகள போட்டிக்கு முன்னோட்டமாக நீளம், உயரம் தாண்டுதலுக்கான 12வது சர்வதேச போட்டி கிரீசில் உள்ள கலிதியா நகரில் நடக்கிறது. அதன் ஆடவர் நீளம் தாண்டுதல் பிரிவின் இறுதி ஆட்டம் நடந்தது. அதில்  இந்திய வீரர் முரளி ஸ்ரீசங்கர் 8.31மீட்டர் தாண்டி புதிய தேசிய சாதனை படைத்ததுடன் தங்கப் பதக்கமும் வென்றார். சுவீடன் வீரர் சோபியாஸ் மான்ட்லர்  8.27மீட்டர் தாண்டி வெள்ளியும், பிரான்ஸ் வீரர்  ஜூல்ஸ் பொம்மெரி 8.17மீட்டர்  தாண்டி வெண்கலமும்  வென்றனர். முதல் முறையாக தான் பங்கேற்ற சர்வதேச போட்டியிலேயே தங்கம் வென்ற ஸ்ரீசங்கருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன. இதற்காக கடந்த சில வாரங்களாக  ஐரோப்பிய நாடுகளில் ஸ்ரீசங்கர் தீவிர பயிற்சி மேற்கொண்டது குறிப்படத்தக்கது.

 

Comments

Popular posts from this blog