ஓய்வு முடிவு! ராயுடு ‘யூ டர்ன்’



நடப்பு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறப் போவதாக நேற்று ட்வீட் செய்து பரபரப்பை ஏற்படுத்திய சிஎஸ்கே வீரர் அம்பத்தி ராயுடு (36 வயது), அடுத்த அரை மணி நேரத்தில் தனது பதிவை நீக்கி அந்தர் பல்டி அடித்தார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், ‘இதுவே எனது கடைசி ஐபிஎல் சீசன் என அறிவிப்பதில் மகிழ்ச்சி. கடந்த 13 ஆண்டுகளில் 2 மகத்தான அணிகளுக்காக விளையாடியது, மறக்க முடியாத தருணங்களாக அமைந்தன. இந்த அருமையான பயணத்துக்காக மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கேவுக்கு நன்றி’ என தகவல் பதிந்திருந்தார். எனினும், சென்னை அணி நிர்வாகம் பேசியதைத் தொடர்ந்து, தனது ஓய்வு முடிவை அவர் மாற்றிக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:


விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog