CSK: ‘சிஎஸ்கேவுக்கு புது கேப்டன் இவர்தான்?’…வெளிநாட்டு வீரருக்கு ஸ்கெட்ச்: 12 கோடி கொடுக்க திட்டம்!


CSK: ‘சிஎஸ்கேவுக்கு புது கேப்டன் இவர்தான்?’…வெளிநாட்டு வீரருக்கு ஸ்கெட்ச்: 12 கோடி கொடுக்க திட்டம்!


ஐபிஎல் 15ஆவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன்சென்னை சூப்பர் கிங்ஸ்அணி தொடர் தோல்விகளை சந்தித்து, தொடர்ந்து புள்ளிப் பட்டியலில் 9ஆவது இடத்தில் நீடித்து வருகிறது.

இந்த சீசன் துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு, சிஎஸ்கே கேப்டன் பதவியை ஏற்றுக்கொண்ட ரவீந்திர ஜடேஜா முதல் 8 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுக்கொடுத்தார். அதுமட்டுமல்ல பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலுமே படுமோசமாக சொதப்பி பார்ம் அவுட்டிற்கு சென்றார்.

ஜடேஜா விலகல்:

ஜடேஜா தொடர்ந்து கேப்டன் பதவியில் நீடித்தால், அவரது நிலைமை இன்னும் மோசமாகும் எனக் கருதப்பட்ட நிலையில் அவர் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். மீண்டும் தோனி வசம் கேப்டன் பதவி சென்றது. தோனி தலைமையில் சிஎஸ்கே முதல் 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்று அசத்தியது. அந்த ஒரு தோல்வி கூட 12 ரன்கள் வித்தியாசத்தில்தான். இதனைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக களமிறங்க சிஎஸ்கே படுதோல்வியை சந்தித்து, பிளே ஆஃப் ரேசில் இருந்து வெளியேறியுள்ளது.

ஜடேஜா திட்டவட்டம்:

ஜடேஜா இதற்குமுன் கேப்டன்ஸி அனுபவம் இல்லாமல் இருந்ததால், சிஎஸ்கேவை வழிநடத்தியபோது அழுத்தங்கள் காரணமாக பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் படுமோசமாக சோதப்பினார். இதனால், நிர்வாகம் அதிருப்தியடைந்து ஜடேஜாவை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியதாக கூறப்படுகிறது. கேப்டன் பதவியிலிருந்து நீக்கியதால் நிர்வாகத்திற்கும், ஜடேஜாவுக்கும் இடையில் வார்த்தைபோல் நடந்ததாகவும், இதனால்தான், ஜடேஜா காயத்தை காரணம் காட்டி அணியிலிருந்தே விலகியதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இதனால், அடுத்த சீசனில் ஜடேஜா சிஎஸ்கேவுக்கு விளையாடுவது சந்தேகம்தான் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

புது கேப்டன்:

இந்நிலையில் புதுக் கேப்டனை தேடும் பணியில் சிஎஸ்கே ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்களது முதன்மை தேர்வாக பென் ஸ்டோக்ஸ் இருப்பதாகவும், இவருக்கு 12 கோடி சம்பளமாக கொடுப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தோனி இந்த சீசனோடு விலகிவிட்டால் 12 கோடி மிச்சமாகும். மேலும் உத்தப்பா, மொயின் அலி போன்றவர்களை கழற்றிவிடவும் சிஎஸ்கே முனைப்பு காட்ட வாய்ப்புள்ளது. இதனால் பெரிய தொகையை சிஎஸ்கே மிச்சப்படுத்தும். இதன்மூலம் சாம் கரன் போன்ற வீரர்களையும் அந்த அணி வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

Chorizo Meatballs

‘பிரெஞ்சு ஓபன்’…ஜோகோவிச்சை வம்பிழுத்த நடால்: இறுதியில் நடாலே வெற்றி: சுவாரசிய போட்டி!

The Best Bacon Cheddar Cream Cheese Dip