‘இந்த இந்திய வீரர்’…அசால்ட்டா 110 சதங்களை அடிப்பார்: அவரப் போய் குறைசொல்றீங்களே…அக்தர் அதிருப்தி! இந்திய அணி முன்னாள் கேப்டன் விராட் கோலி, கடந்த இரண்டு வருடங்களாக சதமே அடிக்கவில்லை. மேலும், ஐபிஎல் தொடரிலும் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இதனால் அனைத்து விதமான கேப்டன் பதவிகளிலும் இருந்து கோலி விலகியுள்ளார். இந்நிலையில் கோலியன் ஆட்டம் குறித்து, பலரும் பலவிதமாக விமர்சித்து பேசி வருகிறார்கள். இதற்கு பாகிஸ்தான் அணி முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கண்டனங்களை தெரிவித்துள்ளார். அக்தர் பேட்டி: அதில், “விராட் கோலிக்கு மரியாதை கொடுங்கள். உங்களை நீங்களே அசிங்கப்படுத்திக் கொள்ளாதீர்கள். நீங்கள் பேசுவதையெல்லாம் அடுத்த தலைமுறை கேட்கிறது. ஒரு பாகிஸ்தான் நாட்டு வீரராக சொல்கிறேன், கோலிதான் மிகச்சிறந்தவர். அவர் எந்த கவலையும் இன்றி 45 வயதுவரை விளையாட வேண்டும்” எனக் கூறினார். மேலும் பேசிய அவர், “விராட் கோலி 110 சதங்களை அடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். அதற்கான ஆற்றல் அவரிடம் இருக்கிறது. அவரால் நிச்சயம் முடியும். விராட் கோலி குறித்து திராவிட் போன்றவர்களே விமர்சித்து ட்வீட் போடுகிறார்கள். தீபாவளி வாழ்த்துகளை கோல...