பிரின்ஸ்: சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!6998218


பிரின்ஸ்: சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!


சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘பிரின்ஸ்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘டான்’ திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. அண்மையில் அந்தப் படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. இந்நிலையில், அவரது அடுத்த படமான ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

சிவகார்த்திகேயனுடன் நடிகை மரியா, நடிகர் சத்யராஜ் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். தமன் இசையமைத்து வருகிறார்.

தெலுங்கு திரைப்படமான ‘ஜாதி ரத்னாலு’ படத்தின் இயக்குநர் அனுதீப் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். ஃபேமிலி என்டர்டெயினராக இந்தப் படம் வெளிவரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் உலக உருண்டையை கையில் சுழற்றுகிறார் சிவகார்த்திகேயன். பின்னணியில் உலக வரைபடம் உள்ளது. ஒரு வெள்ளைப் புறா பறக்கிறது. பலநாட்டு கொடிகள் உள்ளங்கை வடிவில் ‘நாங்கள் இருக்கிறோம்’ என சொல்லும் வகையில் கையை உயர்த்துகிறார்கள்.

 

Comments

Popular posts from this blog