பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்திற்காக 500 மாநகர பஸ்களில் சிசிடிவி கேமரா: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை: நிர்பயா பாதுகாப்பு திட்டத்தின்கீழ், பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்திற்காக 500 மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமரா மற்றும் அவசர அழைப்பு பொத்தான்கள் பொருத்தப்பட்டு, அதன் முன்னோட்ட செயல்பாட்டினை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில், போக்குவரத்துத் துறை சார்பில் பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்திற்காக நிர்பயா பாதுகாப்பான நகர திட்டத்தின் கீழ், 2,500 மாநகர பஸ்களில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் அவசர பொத்தான்கள் பொருத்தும் பணியில், முதல்கட்டமாக 500 பஸ்களில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் அவசர அழைப்பு பொத்தான்கள் பொருத்தப்பட்டு அதன் முன்னோட்ட செயல்பாட்டினை தொடங்கி வைத்தார்.இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பஸ்சிலும் 3 கேமராக்கள், 4 அவசர அழைப்பு பொத்தான்கள்... விரிவாக படிக்க >>