Posts

பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்திற்காக 500 மாநகர பஸ்களில் சிசிடிவி கேமரா: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Image
சென்னை: நிர்பயா பாதுகாப்பு திட்டத்தின்கீழ், பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்திற்காக 500 மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமரா மற்றும் அவசர அழைப்பு பொத்தான்கள் பொருத்தப்பட்டு, அதன் முன்னோட்ட செயல்பாட்டினை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில், போக்குவரத்துத் துறை சார்பில் பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்திற்காக நிர்பயா பாதுகாப்பான நகர திட்டத்தின் கீழ், 2,500 மாநகர பஸ்களில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் அவசர பொத்தான்கள் பொருத்தும் பணியில், முதல்கட்டமாக 500 பஸ்களில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் அவசர அழைப்பு பொத்தான்கள் பொருத்தப்பட்டு அதன் முன்னோட்ட செயல்பாட்டினை தொடங்கி வைத்தார்.இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பஸ்சிலும் 3 கேமராக்கள், 4 அவசர அழைப்பு பொத்தான்கள்... விரிவாக படிக்க >>

ஓய்வு முடிவு! ராயுடு ‘யூ டர்ன்’

Image
நடப்பு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறப் போவதாக நேற்று ட்வீட் செய்து பரபரப்பை ஏற்படுத்திய சிஎஸ்கே வீரர் அம்பத்தி ராயுடு (36 வயது), அடுத்த அரை மணி நேரத்தில் தனது பதிவை நீக்கி அந்தர் பல்டி அடித்தார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், ‘இதுவே எனது கடைசி ஐபிஎல் சீசன் என அறிவிப்பதில் மகிழ்ச்சி. கடந்த 13 ஆண்டுகளில் 2 மகத்தான அணிகளுக்காக விளையாடியது, மறக்க முடியாத தருணங்களாக அமைந்தன. இந்த அருமையான பயணத்துக்காக மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கேவுக்கு நன்றி’ என தகவல் பதிந்திருந்தார். எனினும், சென்னை அணி நிர்வாகம் பேசியதைத் தொடர்ந்து, தனது ஓய்வு முடிவை அவர் மாற்றிக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Tags: விரிவாக படிக்க >>

தமிழ்நாடு கபடி சங்க தேர்தலுக்கு இடைக்காலத் தடை!

Image
சென்னை உயர் நீதிமன்றத்தில் அசோக்நகரை சேர்ந்த கபடி விளையாட்டு வீரர் திருவேல் அழகன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “கபடி விளையாட்டு வீரர்களை தேர்வு செய்து அவர்களின் திறனை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அமைச்சூர் கபடி சங்கம் அமைக்கப்பட்டது. இந்த சங்கத்தின் மூலம் ஏராளமான கபடி வீரர்கள் உருவாகியுள்ளனர். இந்த கபடி வீரர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழகத்திற்காக விளையாடி வெற்றிகளை பெற்றுள்ளனர். மாநில அளவிலான இந்த சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளருக்கான பதவி காலம் 3 ஆண்டுகள். தற்போதுள்ள தலைவர் மற்றும் செயலாளர் பதவிக்காலம் முடிவடைந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் தொடர்ந்து பதவியில் நீடித்து வருகிறார்கள். தமிழகத்தில் 38 மாவட்ட கபடி சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படும்... விரிவாக படிக்க >>

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீபா மறைவு: இந்தியா ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு

Image
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீபாவின் மறைவையடுத்து இந்தியா ஒருநாள் துக்கம் அனுசரிக்கிறது. நேற்று (வெள்ளிக்கிழமை) காலமான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்று (2022, மே, 14 சனிக்கிழமை) ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என இந்தியா அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ( United Arab Emirates ) அதிபரும் ஆட்சியாளருமான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் காலமானதாக அந்நாட்டின் அதிபர் விவகார அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.  நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த ஷேக் கலீஃபா வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 73. இவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் நிறுவனர் அதிபர் ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யானின்... விரிவாக படிக்க >>

பொருளாதார நெருக்கடி, ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சி : இலங்கை சீரழிய காரணம் இது தான்!

Image
இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடி, அதனால் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பு, அதை சீர்செய்ய இந்தியா எடுத்து வரும் முயற்சிகள் குறித்து, சென்னையைச் சேர்ந்த புவிசார் அரசியல் ஆய்வாளர் இரா.கணேஷ்குமார் அளித்த பேட்டி: ஒவ்வொரு நாடும் எந்தவிதமான கொள்கையை உருவாக்கி, அதன் வழியில் ஆட்சி அதிகாரத்தை மேற்கொள்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.இந்தியா, ஜனநாயக கட்டமைப்பை கொண்டது. இலங்கை, சோஷியலிசம் மற்றும் கம்யூனிசம் கலந்த கொள்கையின் கீழ் அதிகார கட்டமைப்பை கொண்டது. இந்த கொள்கை வகுத்து செயல்படும் நாடுகள் அனைத்துமே, இலங்கையில் ஏற்பட்டது போன்ற நெருக்கடியை சந்தித்து வருகின்றன. அதனால் தான், பெரிய நாடுகள் கூட, அந்த கொள்கையில் இருந்து விலகி வருகின்றன. சீனாவின் ஆட்சி முறை சித்தாந்தமும், சோஷியலிசமும், கம்யூனிசமும் கலந்தது தான். ஆனால், அதை... விரிவாக படிக்க >>

இந்தாங்க உங்க 1000 ரூபாய் காசு.. வாரிக் கொடுத்த எம்எல்ஏவை திணறடித்த மாணவி! என்னதான் பிரச்சினை..!

Image
Tuticorin oi-Rajkumar R By Rajkumar R Published: Friday, May 13, 2022, 20:49 [IST] தூத்துக்குடி : காங்கிரஸ் எம்.எல்.ஏ ஊர்வசி அமர்தராஜ் உருவப்படத்தை வரைந்து கொடுத்த கல்லூரி மாணவிக்கு அவர் 1000 ரூபாய் கொடுத்த நிலையில், பணத்தை வாங்க மறுத்த மாணவி மேடையிலேயே அழுது புரண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.கே ராஜரத்தினம் அறக்கட்டளை சார்பில் "நமக்கு நாமே" திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பில் கல்லூரி கட்டடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விரிவாக படிக்க >>

பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம்! - என்ன சொல்கிறார் பாரதியார் பல்கலை துணைவேந்தர்?

Image
பாரதியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் ஆளுநர் ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, துணை வேந்தர் காளிராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்காக ஆளுநர், அமைச்சர் நேற்றே கோவை வந்துவிட்டனர். காலை அந்த நிகழ்வை செய்தியாக்க, ஊடகத்துறையினர் பாரதியார் பல்கலைக்கழகம் சென்றனர். பொதுவாக பட்டமளிப்பு விழாக்களில் ஒரு ஃபைல் கொடுக்கப்படும். அதில், பட்டமளிப்பு விழா சம்பந்தமான விவரங்கள், நோட், பேனா உள்ளிட்டவை இருக்கும். விகடனின் அதிரடி ஆஃபர்! தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா ₹999 மட்டுமே! மிஸ்... விரிவாக படிக்க >>