உச்சம் தொட்ட தங்கம் விலை; எவ்வளவு தெரியுமா ? உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக கச்சாஎண்ணெய் விலையினை தொடர்ந்து தங்கம் விலையும் ஏற்ற இறக்கத்துடம் காணப்பட்டு வந்தது. இந்நிலையில் தங்கம் விலை இன்று அதிகரித்துள்ளது. சென்னையில் ஆரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.34 அதிகரித்து ரூ. 4,884- க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் சரவனுக்கு ரூ. 39,072 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே தூயதங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ 38 அதிகரித்து ரூ. 5,328- க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் சரவனுக்கு ரூ. 42, 624 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளியின் விலை மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ. 68.80 -க்கும், ஒரு கிலோ ரூ. 68. 800-க்கும் விற்பனையாகிறது. மேலும், தங்கம் விலை கடந்த 10 நாட்களாகவே குறைந்து காணப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள். Related Topics: அதிகரிப்பு , தங்கம் விலை Click to comment